Saturday, January 30, 2010

கிராசு பெல்ட்டு தினமலர்

தமிழ்களை கொன்று குவித்த ராசபட்சியை புகழாழரம் செய்து கிந்து நாளிதழ் ராம் இலங்கையிடம் இருந்து பரிசு வாங்கிதை போன்று தினமலர் பார்பானிய நாளிதழ் இலங்கையிடம் இருந்து பரிசு வாங்க தமிழனுப்பு எதிரான செய்திகளை வெளியிட்டு வருகிறது. வாசகர் பேர்வையில் விசமத்தனமான பதிவுகளையும் செய்துள்ளது. இதற்க்கு ஆதரவாக சில கிராசு பெல்ட்டுகளும் கிராசு பசங்களும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது

கிராசு பெல்ட்டு தினமலர் வெளியிட்ட விசமதனமான செய்தி பின்வருமாரு

கிடைத்தது வெற்றி; அடுத்தது என்ன? அதிபர் ராஜபக்ஷே மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு
ஜனவரி 31,2010,00:00 IST

Front page news and headlines today

தொடர் குண்டு வெடிப்புகள், மனித வெடிகுண்டு தாக்குதல்கள், ரத்தச் சிதறல், உயிர்ப் பலி போன்ற கோரமான சம்பவங்கள் ஓய்ந்து, இலங்கை மக்கள் கடந்த சில மாதங் களாக, அமைதிக் காற்றை சுவாசித்து வருகின்றனர்.


விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிய சூட்டோடு, அதிபர் தேர்தலையும் நடத்தி, தன்னைப் பற்றி அவதூறு பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமோக வெற்றி பெற்று, மீண்டும் மகுடம் சூடியுள்ளார், ராஜபக்ஷே. இந்த வெற்றியை அவர் எப்படி பயன்படுத்திக் கொள் ளப் போகிறார் என்பதே, தற்போது எழுந்துள்ள கேள்வி. இலங்கையும், அதன் அண்டை நாடுகளும் மட்டுமல்லாமல், சர்வதேச நாடுகளும் கூட, ராஜபக்ஷேவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை கூர்ந்து கவனித்து வருகின்றன.


சட்டம் படித்தவர்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அரசியல் குடும் பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை டி.ஏ.ராஜபக்ஷே, விஜயேந்திர தகநாயகே அமைச்சரவையில், விவசாய அமைச்சராக பதவி வகித்தவர். இவர் இறந்த பின் தான், ராஜபக்ஷே அரசியலுக்குள் அடி எடுத்து வைத்தார். சட்டம் படித்த ராஜபக்ஷே, கடந்த 1970ல் முதல் முதலாக, இலங்கை சுதந்திர கட்சி வேட்பாளராக பார்லிமென்டுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கு முன், சில சிங்கள திரைப்படங்களிலும் இவர் நடித்துள் ளார். கடந்த 1994ல் சந்திரிகா குமாராதுங்கா அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராக பதவியேற்றார். இலங்கை எதிர்க்கட்சித் தலைவராகவும் ராஜபக்ஷே பதவி வகித்துள் ளார். இதற்கு பின், 2004ல் நடந்த தேர்தலில் இவரது தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. பார்லிமென்டில் ராஜபக்ஷே கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தது. இதையடுத்து, இலங்கையின் 13வது பிரதமராக இவர் பதவியேற்றார்.


அதிபரானார்: கடந்த 2005ல் நடந்த அதிபர் தேர்தலில் இலங்கை சுதந்திர கட்சி வேட்பாளராக ராஜபக்ஷே அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து, ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன் னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே போட்டியிட்டார். இந்த தேர்தலில், ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ராஜபக்ஷே வெற்றி பெற்று, முதன் முதலாக அதிபராக பதவியேற்றார்.


போரில் கிடைத்த வெற்றி: ராஜபக்ஷே அதிபராக பதவியேற்றபோது, விடுதலைப் புலிகள் இலங்கையில் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்தனர். தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களால், தலைநகர் கொழும்பு தினமும் அதிர்ந்து கொண்டு இருந்தது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சி நடுங்கினர். விடுதலைப் புலிகளை எப்படியாவது ஒழித்துக் கட்டுவது என உறுதி எடுத்த ராஜபக்ஷே, வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற ராணுவ உதவிகளுடன், புலிகளுக்கு எதிரான சண்டையை தீவிரப் படுத்தினார். விடுதலைப் புலிகளின் கோட்டைகளாக விளங்கிய கிளிநொச்சி, முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகள் வீழ்ச்சி அடைந்தன.இறுதியாக கடந்தாண்டு மே மாதம் நடந்த இறுதிக் கட்ட போரில், விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுக்கும் பெரும் சவலாக விளங்கிய விடுதலைப் புலிகளை தோற்கடித்தது, ராஜபக்ஷே நிகழ்த்திய மிகப் பெரிய சாதனையாக கருதப்பட்டது.


முன்கூட்டியே தேர்தல்: இந்த சாதனையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டார், ராஜபக்ஷே. இலங்கையை பொறுத்தவரை அதிபரின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். ஆனால், பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னரே, அதிபர் தேர்தலை நடத்த உத்தரவிட்டார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியால், சிங்கள மக்களிடையே தனக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, அதிரடியாக காய் நகர்த்தினார் அவர்.


பொன்சேகாவால் சங்கடம்: இந்த சூழ்நிலையில் தான், புலிகளுக்கு எதிரான போரில் ராணுவ தளபதியாக செயல்பட்ட சரத் பொன்சேகா, ராஜபக்ஷேவுக்கு புதிய சவாலை ஏற்படுத்தினார். அவரும் ஐக்கிய தேசிய கூட்டணி சார்பில் களம் இறங்கினார். புலிகளுக்கு எதிரான வெற்றியை, பொன் சேகாவும் பங்கு போட வந்ததால், ராஜபக்ஷேவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இலங்கையில் உள்ள தமிழர் கட்சியில், பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டணி, சிங்களர்களின் அபிமானம் பெற்ற ஜனதா விமுக்தி பெரமுனா போன்ற கட்சிகளும் பொன் சேகாவை ஆதரித்தன. இலங்கையில் நடந்த போரின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், போர்க்குற்றம் நடந்துள்ளதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ராஜபக்ஷேவுக்கு நெருக்கடி கொடுத்தன. பல்வேறு தரப்பிலும் இருந்து வரும் சவால்களை முறியடிக்க வேண்டுமெனில், தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம், ராஜபக்ஷேவுக்கு ஏற்பட்டது. இதுபோதாதென்று, தேர்தல் கருத்துகணிப்புகளும் பொன் சேகாவுக்கு ஆதரவாகவே வந்தன.


அபார வெற்றி: இத்தனை நெருக்கடிகள் ஏற்பட்டபோதும், ராஜபக்ஷே உறுதியாக இருந்தார். முடிவுகள் வெளியாகத் துவங்கியதும், அவரது உறுதி, எந்த அளவுக்கு உண்மை என்பது தெரிந்தது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் தவிர, மற்ற அனைத்து பகுதிகளிலும், மிகப் பெரு வாரியான ஓட்டுகள் அவருக்கே கிடைத்தன. இறுதியில், 18 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது எதிரிகளுக்கு பதிலடி கொடுத்தார்.


வெற்றி சாத்தியமானது எப்படி? ராஜபக்ஷேயின் தேர்தல் வெற்றி, சிங்கள மக்கள் அவருக்கு கொடுத்த பரிசு என்று தாரளமாக கூறலாம். தங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய விடுதலைப் புலிகளை ஒழித்தவர், சுதந்திரமாக தெருக்களில் நடமாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, ராஜபக்ஷேவுக்கு அவர்கள் அமோக வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர். சரத் பொன்சேகாவின் சொந்த ஊரில் கூட, ராஜபக்ஷே தான் அதிகமான ஓட்டுகளை பெற்றார். இதிலிருந்து, சிங்கள மக்கள் அவரை எந்த அளவுக்கு ஆதரித்தனர் என்பது தெளிவாக தெரியும். கடந்த தேர்தலில் தப்பித்தோம், பிழைத்தோம் என, ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜபக்ஷே, இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவினாலும், 18 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று, வெற்றி பெற்றார். நாட்டில் இருந்த பயங்கரவாத அச்சுறுத்தலை அவர் ஒழித்ததே இதற்கு காரணம்.


மேலும், தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன், சரத் பொன்சேகா கூட்டணி வைத்திருந்ததும், ராஜபக்ஷேவின் வெற்றியை எளிதாக்கி விட்டது. தமிழ் அரசியல் கட்சி தலைவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் எவரையும் சிங்கள மக்கள் விரும்பவில்லை. சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்கே ஆகிய தலைவர்களும், ஜனதா விமுக்தி பெரமுனா போன்ற கட்சிகளும் இதற்கு விதி விலக்கு அல்ல என்பதை, ஓட்டுச் சீட்டின் மூலம் அழுத் தம், திருத்தமாக சிங்களர்கள் நிரூபித்து விட்டனர். இதை விட முக்கியமான காரணம், சரத் பொன்சேகா ஒரு தேர்ந்த அரசியல்வாதி அல்ல என்பது தான். அடிப்படையில் அவர் ஒரு ராணுவ வீரர். ரணில் விக்கிரமசிங்கே போன்றவர்கள் தான், அவரின் பின்புலமாக செயல்படுவர் என்பதையும் சிங்கள மக்கள் தெளிவாக உணர்ந்து இருந்தனர்.


தமிழர் ஓட்டு கிடைக்காதது ஏன்? தமிழர்கள் அதிகமாக வசிக் கும் மாவட்டங்களில், ராஜபக்ஷேவுக்கு மிக குறைவான ஓட்டுகளே கிடைத்துள்ளன. தமிழர்களின் பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டணி, பொன் சேகாவுக்கு ஆதரவு தெரிவித்தது இதற்கு முக்கியமான காரணமாக இருந்தாலும், ராஜபக்ஷே குறித்த பயம் தமிழர்களிடம் இன்னும் குறையவில்லை என்பதும், ஒரு காரணமாக உள்ளது. ராஜபக்ஷே மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நமக்கு எதிராக செயல்படுவாரோ என்ற அச்சம், தமிழர்களிடம் நிலவியதால் தான், பொன் சேகாவுக்கு அவர்கள் ஓட்டளித்ததாக, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


என்ன செய்யப் போகிறார் ராஜபக்ஷே? தனது முந்தைய பதவிக் காலத்தில், பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலேயே அதிக கவனம் செலுத்திய ராஜபக்ஷே, தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளார். போரால் பாதிக்கப் பட்ட இலங்கை போன்ற நாடுகளில், பொருளாதார கட்டமைப்பை சீரமைக்க வேண்டியது, மிகவும் அவசியமான ஒன்று தான். இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக சீனா, இந்தியா போன்ற அண்டை நாடுகள், கோடிக் கணக்கில் முதலீடு செய்யவும் தயாராக உள்ளன. நாடு, தற்போது அமைதிப் பூங்கா ஆகி விட்டது. வேறு சில வெளிநாடுகளும், இலங்கையில் முதலீடு செய்ய முன்வரலாம். எனவே, பொரு ளாதார வளர்ச்சியை எளிதாக அடைந்து விடலாம். ஆனால், அமைதி நீடிக்க வேண்டுமானால், சிறுபான்மையாக உள்ள தமிழர்களின் நம்பிக்கையையும் அவர் பெற வேண்டும்.


முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள எஞ்சிய தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். தமிழர்கள் மறு குடியமர்த்தப் பட்ட பகுதிகளில், போதிய அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, அவர்களுக்கான வேலை வாயப்புகளையும் அதிகரிக்க வேண்டும். அங்குள்ள தமிழர்களும், இலங்கை மண்ணின் மைந் தர்களே. அவர்களை புறக்கணித்து விட்டு, இலங்கையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியாது. தேர்தலில் வெற்றி பெற்றாகி விட்டது. இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு அதிபர் அவர் தான். நீண்ட கால போர், தேர்தல் என, ராஜபக்ஷேவுக்கு தொடர்ந்து வெற்றிப் பரிசாக கிடைத்து வருகிறது. ராஜபக்ஷே பெற வேண்டியது இன்னும் ஒரே ஒரு விஷயம் தான். அது, இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கை. அதையும் வெகு விரைவில் பெறுவார் என, நம்புவோம்.


சிவாஜி லிங்கம் படுதோல்வி: இலங்கை தமிழ் தேசிய கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சிவாஜிலிங்கம். எம்.பி.,யாகவும் உள் ளார். அதிபர் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டணி, பொன் சேகாவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதை சிவாஜிலிங்கம் ஏற்கவில்லை. அதிபர் தேர்தலில் சுயேச்சையாக போட் டியிட்டார். தமிழர்கள் இவருக்கு ஆதரவு அளிப் பர் என, கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் சிவாஜிலிங்கத்துக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அவருக்கு 9,662 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.


ராஜபக்ஷே வெற்றிக்கான காரணம்


* விடுதலைப் புலிகளை ஒழித்து, நாட்டு மக்களை மிகப் பெரிய அச்சுறுத்தலில் இருந்து விடுவித்தது.


* இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக சீனா, இந்தியா போன்ற அண்டை நாடுகளின் உதவியை கேட்டு பெற்றது.


* சண்டை முடிவுக்கு வந்தபின், இலங்கைக்கு வருவாயை கொட்டும் சுற்றுலாத் துறையையும் மற்றும் கட்டமைப்புத் துறையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்தது.


* தொழிலதிபர்களிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்தி, முதலீடு செய்ய வைத்தது.


பலவீனம்


* சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் மட்டுமே, அதிக ஓட்டுகள் பெற்றுள்ளது.


* சிறுபான்மையாக உள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறாதது.


* இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அடக்குமுறை நடப்பதாக கூறப்படும் புகார்கள்.


- நமது சிறப்பு நிருபர் -
நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
ராஜபக்ஷ ஒரு verygood man
நல்ல பதிலடி புலி ஆதரவாளர்களுக்கு
by ss s.sutha,toronto,Canada 1/31/2010 4:04:08 AM IST
இவரின் வெற்றிக்கு காரணம் சிங்களர் மட்டும் இல்லை ஒரு வகையில் தமிழர்களும் காரணம் என்பது மறுக்க முடியாது..பிரபாகரனை கொன்று புலிகளை அடக்கி தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டியது.

தமிழ் ஈழம் மலராமால் போக முக்கிய காரணமே இலங்கை தமிழ் தலைவர்களின் ஒற்றுமையின்மை தான்,பல குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் அடித்துகொண்டது
கடைசியில் விடுதலை புலிகளுக்குள் இருந்த நல்ல நல்ல தலைவர்கள் மாற்று கருத்து சொன்னதால் சுட்டு கொல்லபட்டார்கள் பிரபாகரனால்.
பிரபாகரன் கூட ஒரு சர்வதிகார மனப்பான்மை கொண்டவர்..

இப்போ பிரபாகரன் இல்லை..அவர் இல்லாமால் போக காரணம் ராஜபக்சே மற்றும் இவருக்கு உதவிய நாடுகள். அதில் ஒன்று நமது இந்தியா.

ஆக ஒரு தமிழனை கொன்று தான் இன்று இவர் வெற்றி பெற்று உள்ளார்..ஆக இவர் வெற்றி பெற்றதும் கொல்லப்பட்ட பிரபாகரனால் தான் தமிழர்களின் பிணங்களின் மேல நடந்து வந்து வெற்றி பெற்றுள்ளார் இவர்..இனி மேற்கொண்டு யாருக்கு தொந்திரவு தருவார் எனில் இந்தியாவுக்கு தான் சீனாவுடன் சேர்ந்து..முடிந்தால் பாகிஸ்தானும் சேரும் இந்த ராஜபக்சே உடன்..இந்திய அரசுக்கு தலைவலிதான் இலங்கை இனி வரும் நாட்களில்..
by GB ரிஸ்வான்,jeddah,Saudi Arabia 1/31/2010 3:00:29 AM IST
அடுத்தது மீதம் உள்ள கொஞ்ச nenja தமிழ் makala konutu thaniya pootutu thoonga vendiyathu thaan. Oru vaaram kalichi Delhi vanthu amayaruku oru party kuduthu nandri solitu poi yethuthu pooti ita Ponseka vai kaali panitu yenaku thaan niraya palu irukunu E E E E E E nu ilichikitu oru poss kuduthomanu ilama....
by P Suresh,Florida,United States 1/31/2010 2:39:41 AM IST
அடுத்தது என்ன தமிழக அரசியல் வாதிகளின் ஆலோசனையோடும் இந்திய அரசின் துணையோடும் என் இன தமிழ் மக்களை கொன்று குவித்தது பத்தாது என்று அடிமையாய் நடத்துவதுதான்....ம்ம் நான் கருத்து எழுதி என்ன ஆகப் போகிறது அதிகாரத்தில் இருப்பவர்கள் தன் சுய நலத்தை கருதாமல் இனியாவது என் தமிழ் இனத்தை காப்பார்கள் என்ற நப்பாசைதான் !!!!
by k siva,Mumbai,India 1/31/2010 2:21:51 AM IST
இலங்கையில் கூட்டமைப்பினர் திரும்பவும் சரத் போன்செகவுக்கு ஆதரவு கொடுத்து திரும்பவும் மாபெரும் தவறை செய்து விட்டனர். 2005 தேர்தலிலும் மகிந்த ராஜபக்ஷவிடம் காசு வாங்கி கொண்டு புலிகள் ரணிலை வர விடாமல் செய்தனர். இதற்க்கு கூட்டமைபினரும் சேர்ந்து ஆதரவு தெரிவித்தினர். இப்போது வெளி நாட்டின் பூகளின் சொல்லுக்கு பயந்து மகிந்தவை பழி வாங்கிரதிற்ற்காக, திரும்பவும் தமிழ் மக்களை பலி ஆக்கி விட்டார்கள். இந்த கூட்டமைப்பினர் தேர்தலின் போது தான் இலங்கைக்கு வருவார்கள். மற்றம்படி தமிழ் மக்கள் கஷ்டப்படும்போது வெளி நாட்டில் பிள்ளைகளுடன் சுகமாக இருப்பார்கள். இனி இலங்கை அமைதியாக இருக்க வேண்டும் என்றால், இந்தியாவில் இருக்கும் வைகோ, நெடுமாறன், சீமான் திருமாவளவன், ராமதாஸ், அமைதியாக இருந்தாலே, எங்கள் நாட்டுக்கு அமைதி கிடைக்கும்.
by பாலா,vancouver,Canada 1/31/2010 12:59:40 AM IST
திரு ராஜபக்ஷே அவர்கள் தமிழ் நாடு அரசியல்வாதிகளிடத்தில் சிலவற்றை கற்றாலே தமிழர்களை எப்படி பிரித்து ஆள்வது என்று அறியலாம். முதலில் தமிழர்களுக்கு இடஒதுகீட்டை கொண்டுவந்தால் 100 ஆகா பிரிவார்கள், பின்பு இலவசங்களை கொண்டுவந்தால் 1000 ஆகா பிரிவார்கள். ஒரு கூட்டம் அடுத்து என்ன கிடைக்கும் என்று காத்திருக்கும், மற்றொரு கூட்டம் எதுவும் கிடைக்காது என்று சூன்யமாய் இருக்கும். பின்பு பிரிந்து கிடக்கும் தமிழன் அவனுக்குள்ளே அடிதுகொள்வான், பின்பு அவனை ஆள்வது மிக சுலபம். இதை தான் சீமயிலிருந்து வந்த பரங்கியர்கள் நமக்கு சொல்லிகொடுத்தது. வாழ்த்துக்கள் திரு ராஜபக்சே, கப்பத்தை தமிழக அரசியல் வாதிகளிடம் செலுத்தவும்.

No comments:

Post a Comment