Thursday, April 22, 2010

ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்

தமிழகஅரசு சின்னத்தில் இருக்கும் மதசம்பந்த பட்ட சீவில்லிபுத்தூர் கோபுர சின்னத்தை அகற்றி விட்டு தமிழனின் சொத்தான திருவள்ளுவரை போட சொன்னால் . ஆரியாவில் இருந்த வந்த பார்பன தினமலர் நாளேடு பின்வருமாரு கொச்சையக வாசகர் கருத்து என்ற போர்வையில் வெளியிட்டுள்ளது

கோபுர சின்னத்தை மாற்றும் பேச்சு: மக்களின் சினத்தை தூண்டும் செயல்
ஏப்ரல் 22,2010,00:00 IST

Front page news and headlines today

ஸ்ரீவில்லிபுத்தூர் : சட்டசபையில் சில நாட்களுக்கு முன் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., ரவிக்குமார், ''தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் கோபுரத்தை மாற்றி, திருவள்ளுவர் படத்தை சின்னமாக அறிவிக்க வேண்டும்,'' என்றார்.

காலாவதி, போலி மருந்து விற்பனை; மின் தட்டுப்பாட்டால் தொழில், விவசாயம் பாதிப்பு; குடிநீர், சாலை, பஸ், பள்ளிகளுக்கு கட்டடம் முதலிய வசதிகள் இன்மை என பலவகையிலும் பரிதவிக்கிறது தமிழகம். மக்கள் அடிப்படை தேவைகளை பேசி தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்பில் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பப்படும் எம்.எல்.ஏ., இப்படி, 'கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் அமரவை' என்ற கதையாக, தேவையற்ற பிரச்னைகளை பேசி அவையின் நேரத்தையும், மக்களின் எதிர்பார்ப்பையும் வீணடிக்கும் பணியில் சிரத்தையாய் ஈடுபடுவதால், தமிழகம் வளர்ச்சி பெற்று தலை நிமிர்வது கனவாகவே இருக்கும். சின்னம் மாற்ற வேண்டும் என்ற ரவிக்குமார் எம்.எல்.ஏ.,வின் பேச்சுக்கு ஸ்ரீவி., மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஸ்ரீவி., எம்.எல்.ஏ., ராமசாமி (இந்திய கம்யூ.,): ரவிக்குமார் பேசியது கண்டிக்கத் தக்கது. இதை அரசின் கருத்தல்ல. கோபுர சின்னத்தை மாற்ற முயற்சி செய்தால் கடுமையாக எதிர்ப்பேன்.

காங்., மாவட்ட செயலாளர் வன்னியராஜ்:'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பதற்கேற்ப தமிழகம் தற்போது நல்ல நிலையில் உள்ளதற்கு காரணம் ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் கோபுரம் சின்னமே. இதை மத சின்னமாக பார்க்காமல் புராதன சின்னமாக பார்க்க வேண்டும். இதை மாற்ற முயற்சிப்பது சரியல்ல.

திலகராஜன் (அ.தி.மு.க., வக்கீல் பிரிவு மாவட்ட துணை செயலாளர்): திராவிட பாரம்பரிய கட்டடக்கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. ரவிக்குமாரின் பேச்சின் பின்னணியில் தி.மு.க, அரசின் செயல்பாடுகள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தின் மதிப்பை அதிகரிக்க செய்யும் கோபுரம் சின்னத்தை மாற்றும் எண்ணத்தை கைவிட வேண்டும்.

முத்துச்சாமி ( திருநாவுக்கரசர் நற்பணி மன்ற தலைவர்) : கோபுரத்திற்கென்று தனி மரியாதை உள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு தனி மரியாதை கிடைக்கிறது. கோபுரத்தை பார்க்கும் போது மனிதனின் எண்ணங்கள் உயரும். அதே போல் தமிழக அரசின் கோபுர சின்னத்தை பார்க்கும் போது தமிழகத்தை பற்றிய எண்ணமும் உயரும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோபுரம் சின்னத்தை மாற்றும் எண்ணமே வரக்கூடாது.

தங்கராஜ்( ஆர்.எஸ்.எஸ்., சேவை பிரிவு மாவட்ட செயலாளர்): கேரளாவில் யானைகள் அதிகம் இருப்பதால், அங்கு யானை மாநில சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் கோயில்கள் அதிகம் உள்ளதால் கோபுரத்தை தமிழக அரசு சின்னமாக வைத்துள்ளது. நமது முன்னோர்கள் பல முறை ஆலோசனை செய்து வைத்த கோபுரம் சின்னத்தை மாற்றுவது சரியல்ல. அதை மாற்றுவதால் தமிழக அரசு தன் தனித் தன்மையை இழந்து விடும்.

ராமசாமி ( நகர பா.ஜ., துணை தலைவர் ): ஆண்டாள் பாசுரம் பாடிய பெருமை படைத்த ஸ்ரீவி.,கோயிலில் கோபுர சின்னத்தை தமிழக அரசு மாற்ற முயற்சி செய்ய கூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., யின் பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது. இது விருதுநகர் மாவட்ட மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது.

துரை பாண்டியன்( பசுமை பாரத அமைப்பாளர்): வரலாற்று சிறப்பு படைத்த ஆண்டாள் கோயில் ராஜ கோபுரத்தை, தமிழக அரசு சின்னத்திலிருந்து மாற்ற க்கூடாது.இவ்வாறு தெரிவித்தனர்.

ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்று. இக்கோயிலின் ராஜ கோபுரம் தமிழக அரசின் சின்னமாக இருப்பதை மக்கள் பெருமையாக கருதுகின்றனர். ரவிக்குமார் எம்.எல்.ஏ.,வின் பேச்சால் ஸ்ரீவி., மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் சின்னம் குறித்து அரசின் நிலையை முதல்வர் கருணாநிதி தெளிவாக விளக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
ஐயா, மாத்த வேண்டியது ' வாய்மையே வெல்லும்' என்ற வாசகம்தான். இன்றைய நாட்டு நடப்புக்கு சம்பந்தம் இல்லாத வாசகம் அதுதான்.
by V கிருஷ்ணா,Noida,India 22-04-2010 10:53:37 IST
ரவிக்குமார் அவர்களே ! திருவள்ளுவர் உருவம் என்பது கருணாநிதி அவர்களால் கற்பனையாக உருவாக்க பட்ட ஓவியம். ஆனால் கோபுரம் திரவிடனால் உருவாக்கப்பட்ட உயருள்ள கட்டிடம். இது அனைத்து தமிழனும் பெருமைபட வேண்டும். வழக்கமாக கொண்டாடும் தமிழ் புத்தாண்டை மாத்தியதுக்கு அடுத்து இதுவா ? பாவம் தமிழன் !
by n தமிழ் நலன் பெற வேண்டும் பத்தன் ,chennai,India 22-04-2010 10:45:06 IST
எப்பொழுது கருணாநிதிக்கு பிரச்சினை என்றாலும் உடனே தேவை இல்லாமல் எதாவது புது பிரச்சினையை kilappi மக்களை திசை திருப்புவது கை வந்த கலை... பார்வதி அம்மாள் பிரச்சனயை மறக்க இப்படி கோபுரம், நளினி ரூம் ல செல் ன்னு எதாவது சொல்லி விட வேண்டியதுதான்... முட்டாள் தமிழன் எல்லாத்தையம் பேசி பேசி நேரத்தை வீனடிப்பன்...
by a சத்ரியன்,chennai,India 22-04-2010 10:41:32 IST
இம்மாதிரியான உணர்வுபூர்வமான பிரச்சனைகளில் கூட jopet மாதிரி திமுக ஜால்ராக்கள் எப்படி ஆதரவாக கருத்து தெரிவிகிறார்கள்?வெட்கம்.
by குமார்,chennai,India 22-04-2010 10:39:58 IST
யோசிக்க தெரியாதவனை எம் எல் ஏ ஆக தேர்ந்தெடுத்தால் இப்படித்தான் தேவை இல்லாததை பேசுவானுக
by R கணேசன்,coimbatore,India 22-04-2010 10:39:46 IST
ரவிக்குமார் எல்லாம் ஒரு ஆளு. அவன் ஒரு ஜாதி கட்சி MLA கருணாநிதியோட கைக்கூலி கருணாநிதி மாதிரி ஜாதி சங்கங்களை கட்சியா மாத்தவிட்டு ஜாதிகள மோதவிட்டு அதுல அரசியல் பண்ணுற ஆளுகள் இருக்கும் வரை இன்னும் பேசுவானுக, வெட்டி பயலுக!
by முத்துராமலிங்கம்,CHENNAI(KARAIKUDI),India 22-04-2010 10:33:09 IST
முதல்ல உங்க தொகுதிய சரி பண்ணுங்க முட்டாள் சட்ட மன்ற உறுப்பினரே. எங்க சின்னத்த மக்களாகிய நாங்களே பார்த்து கொள்ளுகிறோம். நீங்கள் மூடிகிட்டு இருங்கள். ஆதுவே போதும்
by MR ஸ்ரீ,Coimbatore,India 22-04-2010 10:29:10 IST
இந்தியாவில் மற்ற கோவில் கோபுரங்களுக்கு இல்லாத தனி சிறப்பு ஸ்ரீவி.,புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு உள்ளது 'எவ்விதமான உருவங்களோ மற்றும் இன்னபிற தெய்வங்களின் சிலைகளோ இல்லை' என்பதுதான் அது. இதை விட உயரமான கோவில் கோபுரங்கள் இருக்கும் போது தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவி.,புத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தை வைத்திருப்பதற்கு அதுவே முக்கிய காரணம் ரவிக்குமார் உங்களுக்கு சட்டசபையில் பேசுவதற்கு வேறு விஷயங்களே இல்லையா? ஏண்டாப்பா 'கூஜா'தூக்க வேறு பிரச்சினையே இல்லையா?
by r செந்தில் குமார்,riyadh,SaudiArabia 22-04-2010 10:23:07 IST
தமிழகத்தில் எத்தனையோ மாற்றி அமைக்க வேண்டிய பிரச்சனை இருக்கு அதை மாறறுமையா கிளம்பிட்டீர் ?!!! ஏன் உன் பிள்ளைகள் படத்த வைக்க வேண்டியது தானேவோய்.......
by M suresh,sivagangai,India 22-04-2010 10:19:31 IST
இந்த வீணாப்போன வி சி களை ஒரு நாய் கூட சீந்தமாட்டேநேன்கிறது. அந்த கடுப்பில் மஞ்சள் துண்டுக்காரனைப்போல் மூளை பிசகியது போல் ஏதாவது உளறி வைத்தாலாவது நாலு பேர் நம்மை திரும்பி பார்க்க மாட்டார்களா என்ற ஈனத்தனமான அறிவு வேலை செய்துள்ளது. இந்த மாதிரி பேசுவதற்கு மஞ்சள் துண்டை விட்டால் வேறு ஆள் இல்லை என நினைத்திருந்தோம். அந்த லிஸ்ட்ல இவனுகளும் செர்ந்துட்டானுக. ஒரு குட்டைல ஊறி கிட்டிருக்கிற மட்டை தான
by r ரவீந்திரன்,karur,India 22-04-2010 10:16:53 IST
ரவி , உனக்கு வேற வேலை இல்லையா ? . உன் எழுத்தை ஜூனியர் விகடன் ல படிப்பேன், இனிமேல் உன்னை மாதிரி சில்லறை புத்தி காரன் எழுத்து எல்லாம் படிக்க மாட்டேன். உன் தகுதி என்ன ? . உன் தொகுதிக்கு என்ன பண்ணுன. நீ எல்லாம் M .L .A ஆனது தமிழ் நாட்டுக்கு பிடிச்ச தரித்திரம். யாரோ சொன்ன மாதிரி , கருணா தலை போடு , மூணு சிங்கம் பதிலா ஸ்டாலின் அழகிரி கனிமொழி முகம் போட்டு , பணமே வெல்லும் என்று போடலாம், நீ இதை செஞ்சா கருணா உனக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்
by r குமார்,Chennai,India 22-04-2010 10:10:08 IST
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு இப்படில்லாம் பேசத் தெரியாதே? இது ஏதோ நயவஞ்சகரின் சினிமா கதை வசனம் போல் உள்ளது.
by G கணேஷ்,Ahmedabad,India 22-04-2010 10:03:21 IST
இதே மாதிரி மற்ற மத உணர்வுகளையோ பாரம்பரிய சின்னங்களை பத்தியோ வேற தேசத்தில் பேசியிருந்தால் என்ன ஆகி இருக்கும் என மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் ! நேரு அவர்கள் ஆட்சியில் தமிழக சின்னமாக ஸ்ரீவி ஸ்ரீ ஆண்டாள் கோபுரத்தை அறிவித்தபோது P S K அவர்களும் திரு நேருவும் கூறியது போல இது ஒரு தனிப்பட்ட மத சின்னமாக கருதாமல் திராவிட கட்டட கலைக்கு உதாரணமாக ஸ்ரீ பெரியாழ்வாரும் வல்லபா தேவ பாண்டிய மகாராஜாவும் கட்டிய இந்த கோபுரத்தை கருத வேண்டும் என்ற விவரம் திருட்டு ட்ரெயின் ஏறி வந்தவர்களுக்கும் அண்டி பிழைக்கும் vc போன்ற கட்சியினருக்கும் எங்க தெரிய போகிறது! மதங்களை கடந்து அன்னை தெரேசா Dr . கலாம் போன்றோர் வாழும் வாழ்ந்த புனிய பாரதத்தின் பெருமை எந்த பணத்துக்கும் குடும்பத்திற்கும் நாட்டையே அடகு வைக்கும் வீணர்களுக்கு ஸ்ரீ வி கோபுர அழகும் பெருமையும் எங்க தெரிய போகிறது! உலகத்திலேயே இல்லாத சிறப்பாக முன் பக்கம் எப்படி உள்ளதோ அதே போல ஒரு கல் கூட மாறாமல் பின்பக்கம் இருப்பதான symmetrical அமைப்பான இந்த கோபுரத்தை UNESCO கலை பண்பாடு சின்னமாய் அறிவித்தது.
by S Poovarahan,Chennai,India 22-04-2010 09:48:44 IST
enna aachu ரவி உங்களுக்கு?
by karthi,chennai,India 22-04-2010 09:45:40 IST
தலிபான்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். அவர்கள் ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலைகளை வெடித்து சின்னாபின்ன மாக்கினர், நாம் நமது சின்னங்களை தீயிட்டு கொளுத்துகிறோம்.
by J நகுலன்,Kovai,India 22-04-2010 09:44:20 IST
மத சார்பற்ற நாட்டில் எப்படி ஒரு மதத்தின் அடையாலாம் அரசின் சின்னமாக இருக்க முடியும் போலி மதச்சார்பின்மைக்கு இது நல்ல உதாரணம். என்ன கொடுமை சார் இது , இந்த சின்னத்தினால் தான் தமிழ்நாடு நல்லா இருக்காம். இன்னும் முட்டாள்கள் இருப்பதால்.
by k வேல்,chennai,India 22-04-2010 09:42:09 IST
பாரிஸ் எசிலன் எதுவும் தெரியாதவர் பாவம். சட்ட மன்றத்தில் ஒரு உறுப்பினர் இவத விஷயம் பற்றி பொதுமக்கள் பிரச்சினை எவ்வளவோ இருக்க இது பற்றி பேசலாம், முதல்வரும் மற்ற அமைச்சர்களும் தலை ஆட்டலாம். ஆனால் பொதுமக்கள் கருத்தை ஒரு பத்திரிக்கை வெளியிட்டால் இவருக்குப் பத்திக்கிட்டு வரும். பொதுமக்களைவிட இவருக்கு இந்து மதத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியே முக்கியம்.
by R Kumaran,Chennai,India 22-04-2010 09:34:09 IST
Mr M.L.A. Vangina voteku velai seiunga. Ungala solli tapu illa.. Ungaluku votu potta en eniya tamil makkalai sollanum..
by Tamilpithan Pamilpithan,Tamilnadu,India 22-04-2010 09:20:35 IST
Ravikumar- There is lot of matters to be changed at this time, changing the logo is not a mportant matter. Srivilliputhur gopuram (tower) is our pride... Tamilian will never agree to change it.!
by R Sabarinathan,Bangalore,India 22-04-2010 09:18:24 IST
இந்த கேடுகெட்ட அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும். இவனுக பலநூறு கோடிய சேர்த்துட்டானுங்க. இவனுகளுக்கும், புள்ளைங்களுக்கு அமெரிக்கவில் கிரீன் கார்ட் ரெடி பண்ணியிருபானுங்க. தமிழ் வருட பிறப்பை மாற்றியாச்சு. இன்னும் ஹிந்துக்களை இழிவுபடுத்த என்னென்ன பாக்கி உள்ளதோ இந்த இழிமகன்களுக்கு.
by Aru Muthu,chennai,India 22-04-2010 09:16:37 IST
எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு.
by வினோத் குமார் ,Ooty,India 22-04-2010 09:14:57 IST
There is a hidden agenda to finish of Hindus and Hinduism in India by the minority appeasing political parties.
by e manimaran,chennai,India 22-04-2010 09:14:39 IST
வீனா போன விடுதலை சிறுத்தைக்கு வேற வேலையே இல்ல. முட்டாள் தனமா பேசுறது, தேவை இல்லாம ரயில் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது தான் இவர்களின் வேலையா இருக்கு. அவங்க ஜாதி மக்களுங்க செய்ற அட்டகாசம் தங்க முடியல. முட்டாள்கள் கூடத்துல இந்த முட்டாள் எம்.எல்.ஏ.யும் ஒருத்தன் அவளோதான்.
by Sri ஸ்ரீ,Madurai,India 22-04-2010 09:09:48 IST
கோபுரம் சின்னத்தை மாற்றி பாரும்! மக்கள் முதல்வரையும் மாற்றி பார்ப்பார்கள்! ஏற்கனேவே தமிழ் புத்தாண்டை மாற்றி விட்ட ஆணையை ஒருவரும் மதிப்பதில்லை என்பதை மறவாதீர்!
by R பாலசுப்ரமணியம்,Chennai,India 22-04-2010 09:07:39 IST
ரவி குமார் மற்றும் அவரை போன்ற அரசியல் வாதிகளை சட்ட சபைக்கு மக்கள் தேர்ந்தெடுக்க கூடாது. அவர்கள் வன்முறையை தூண்டும் அரசியல் தீவிரவாதிகள்.
by P லெனின் துரை ,Qatar,India 22-04-2010 09:03:42 IST
தமிழகத்தை முன்னேற்ற எவ்வளவோ வழிமுறைகள் உள்ளன. கறை வேட்டி கட்டிக்கொண்டு, வெட்டி பேச்சு பேசும் இவர்களை கட்டி வைத்து ....
by நா ஜெயராமன் ,Suva,Fiji 22-04-2010 09:00:25 IST
என்னப்பா நம்ம தமிழ் நாடு இவ்ளவு கேவலமா இருக்கே .முதலில் கருணாநிதிக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுங்கள் .வயதாகிவிட்டால் வீட்டில் போய் ரெஸ்ட் எடுக்கவும் . கோபுரத்தை எடுத்துவிட்டு இன்று வள்ளுவர் என்றால் நாளை கருணாநிதி தான். தர்மம் என்றும் அழிவதில்லை ...அதர்மம் அடியோடு அழியும் காலம் நெருங்கிவிட்டது . கடவுளிடம் மோதுவது குல நாசம் கோபுரத்தை மாற்ற வேண்டாம். மஞ்சள் துண்டை மாற்ற முயற்சிக்கவும்
by n ஜகதீஷ் குமார் ,KALIYAKKAVILAI,India 22-04-2010 08:54:52 IST
பீர் குப்புசுவாமி உனக்கு கோபுரம் பத்தி பெருமை தெரியாதா ? அவன் தான் அறிவு கெட்ட ரவிக்குமார் பேசறான், வேல வெட்டி கெடையாது, வெட்டி பயல். இவன் எல்லாம் ஒரு சட்டசபை உறுப்பிவனர். உருப்படாத பயல்.
by v ஸ்ரீனிவாசன்,Chennai,India 22-04-2010 08:53:21 IST
ரவிக்குமார் எம் எல் ஏ ஒரு முட்டாள். வேறு என்ன சொல்ல.
by திரு ஜெய்,கனடா,Canada 22-04-2010 08:53:02 IST
குப்பு , நீங்க பிரமாதம்
by r ஆனந்த,Chenai,India 22-04-2010 08:47:35 IST
tamilnadu is the home of temples. if he is interested in secularism, he could have asked for the inclusion of cresent and cross in the emblem beside the gopuram for which there is enough space. instead the removal of the gopuram is not good and unwaranted.
by r paul saint andre,pondicherry,India 22-04-2010 08:32:36 IST
கர்நாடகவிற்கோ,ஆந்தரவிற்கோ நீங்கள் சென்றால் அங்கு கோவில்களுக்கு என்ன மரியாதை உண்டு என்பதை அறியமுடியும். பெங்களூரு விமான நிலையத்தில் கோவில்களை பற்றி விளக்கி உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில்? இந்த மாதிரி ஜால்ரா பசங்களை வைத்து பிரச்சினையை திசை திருப்பும் வேலையை அரசு செவ்வனே செய்து வருகிறது. பேரூந்துகளில் இருந்த திருக்குறளை காணவில்லை. திருக்குறள் உலக பொதுமறை. அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால் மக்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் வழக்கங்களை மாற்ற இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
by குமார்,chennai,India 22-04-2010 08:20:09 IST
திருவள்ளுவரும் வேண்டாம் ....ஆண்டாலும் வேண்டாம் ....பேசாம உதய சூரியன சின்னமா போட்ருவோம்.....அய்யா நான் கட்சி காரன் கெடயாது ! எனக்கும் ஆன்மீகம் தெரியும் ...அறிவியலும் தெரியும் ....கூட்டி கழிச்சி பாரு ...கணக்கு சரியா வரும் !...ஆண்டாள் யாரோட புருஷன்?....இவனுகல்லாம் இடைல புட்ட்டுகுவான் .....ஆயுசு நூறு ...இதுக்கே இவ்ளோ ஆட்டம் .....பத்து ஆயிரம் கோடி வருஷம் ...இந்த சூரியனுக்கு ....அவன் ஆட்டத்த.....நீ பாக்கவே இல்லையே ..... எல்லாம் அவன் செயல் ....இத எழத சொன்னவனும் அவனே !
by M K,Erode,India 22-04-2010 08:13:56 IST
முட்டாள் மக்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் ,
by m mahaa,australia,India 22-04-2010 07:56:12 IST
உடுத்த ஆடை இல்லை. சப்பிடசோறு இல்லை. நல்ல ரோடு இல்லை. குடிக்கதண்ணி இல்லை. விலைவாசி குறையவில்லை. மலம் கழிக்க வசதி இல்லை. மக்களுக்கு பொது அறிவு கொடுக்கவில்லை. லஞ்சம் குறையவில்லை. நோய்களுக்கு நல்ல மருந்து இல்லை. ஏழைகளுக்கு கட்டும் வீட்டில் கலப்படம். குற்றம் செய்தால் சட்டம் இல்லை. சிறையில் சிம் கார்டில் நான்கு வருடம் பேசலாம். ஆனால் அரசியல் வாதிகளுக்கு மட்டும் பல கோடிரூபா உண்டு நல்ல கல்வி உண்டு. எப்படி வரும் ? மக்களே இவர்கள் ஓட்டு வாங்குவது இரண்டு முறைதான். ஒன்னு மதம் ஜாதி இரண்டு இலவசம். இந்தமாதிரி எல்லோரும் தீவிரவாதியா மாறும் காலம் வரும்
by p ஹரி,cochin,India 22-04-2010 07:51:22 IST
தமிழ் நாட்டில் எங்கும் பரவி உள்ளது கொசுவும் அதனால் பரவும் நோய்களே. அதனால் கோவில் சின்னத்தை மாற்றி கொசுவை வைக்கலாம். அரசின் கொள்கையும் ' பணமே பேசும்' என்று வைக்கலாம். இது எப்படி இருக்கு?
by ram,Toronto,Canada 22-04-2010 07:50:24 IST
உங்க சூர்யன மாத்தி திருவள்ளுவர் சிம்பல மாத்துங்க. ஏன்னா நீங்க தான் தமிழ் தியாகி
by pr NAGARAJAN,SINGAPORE,Singapore 22-04-2010 07:46:33 IST
There is so many proplem going around in the Tamilnadu, Now, the Symbol of tamilnadu changing is important to him????... do not waste the time Mr.Ravikumar.
by j கார்த்திகேயன்,theni,India 22-04-2010 07:38:29 IST
அதிமுக அதிகபிரசங்கிகளே! கலைஞர் ஏன் வி.சியை வைத்து காய் நகர்த்த வேண்டும். இந்த சின்னம் மாற்றத்தால் அவருக்கு என்ன பயன். வள்ளுவருக்குதான் புகழேயொழிய வேறு யாருக்கும் இல்லை. உலகில் தமிழர்களாகிய நமக்கு வள்ளுவர் பிறந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற பெருமை கலைஞர் ஐ போய் அடைவதில்லையய்யா. வள்ளுவரை தான் போய் அடைகிறது. இந்த வி.சிகள் தமிழ் தமிழென்று போராட்டம் செய்வது இன்று நேற்று அல்ல. இவர்கள் கலைஞர் கட்டுபாட்டில் இல்லை. கலைஞர் மேல் காழ்ப்புணர்வு கொண்டு இருக்கும் அதிமுக வெறியர்கள். இங்கே கிறுக்குவதற்கு முன்னாள் கீழ்பாக்கம் செல்வது நல்லது. இவர்களுக்கு பெரியாரை தெரியாது. அவர் தந்து போன சமதர்ம சமுதாயம் வேண்டும். இவன், இந்து என்று சொல்லுவான் , கிறிஸ்துவன் என்று சொல்லுவான், முஸ்லிம் என்று சொல்லுவான், ஏன் இந்தியன் என்றும் சொல்லுவான் ஆனால் தமிழன் என்று மட்டும் சொல்ல தயங்குவான். ஏனென்றால் மொழியை ஏன் முதழில் வைக்க வேண்டும் என்று தெரிந்திருக்க தமிழன் புத்திசாலியில்லை. வாழ்க மட வெறி sorry மத வெறி
by t jopet,singapre,Singapore 22-04-2010 07:28:09 IST
ஏன்..ரூபா நாணயத்துல சிலுவை படம் இன்னும் போட்டுக்கொண்டுதானே இருக்கறாங்க? இத ரவிக்குமார் கேள்வி கேட்டாரா? மைனாரிட்டி ஒட்டு போய்டுமே! கோபுரம் தமிழ் மக்களோட கம்பீர சின்னம். தேவையில்லாத பிரச்சனைய கிளப்பறாங்க. கோயிலுக்கே போகாத இந்த ஆளெல்லாம் வாயத் தெறக்கறதே பாவம்.
by V மணி,Chennai,India 22-04-2010 07:15:49 IST
எல்லாத்துக்கும் ஒரு அளவு உண்டு! ஹிந்துகளின் பொறுமையை சோதித்தால் பொங்கி எழும் நாள் வெகு விரைவில்!
by g smani,Gurgaon,India 22-04-2010 07:12:43 IST
யோவ் வயிதெரிச்சலை கெளப்பாதிங்கயா..இப்போ கோபுர சின்னத்தை மாற்றினால் தமிழ்நாட்டிலே,விலைவாசி குறையபோகுதா??இல்ல,மின்சார தட்டுப்பாடு இருக்காதா??இல்ல, அரசு ஊழியர்கள்தான் ஒழுங்கா வேலை செய்ய போறாங்களா??ஓட்டு போட்ட மக்களுக்கு எதாச்சும் உருப்படியா செய்யமுடியுமான்னு பாருங்கயா..எனக்கென்னமோ மஞ்சதுண்டு மேலதான் டவுட்டாயிருக்கு...எதிர்கட்சிங்க தொல்ல தாங்கமுடியாம அவங்கள திசைதிருப்ப வி.சி கட்சி எம்எல்ஏ-வுக்கு எழுதிகொடுத்து பேச சொல்லியிருப்பார் போல இருக்கு..
by K கருத்து கந்தசாமி ,Id,India 22-04-2010 07:08:47 IST
வாழ்க்கையில் நாம் யாரை எல்லாம் பின் பற்ற முடியாதோ அவர்களை எல்லாம் சிலைகளாக்கி நடுத் தெருவில் வைத்தாகி விட்டது. இப்போது கோபுர பிரச்சினை. ரிஸ்வான் சொன்னா மாதிரி செய்யலாம் . அல்லது வரலாற்றுச் சிறப்பு மிக்க அண்ணா அறிவாலயம் அதை செய்யலாமே..முக்கியத்துவம் இல்லாத ஒன்றிற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பதும் முக்கியம் காட்ட வேண்டிய இடத்தில் அலட்சியம் காட்டுவதும் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது .
by a kilavansethupathi,chennaik,India 22-04-2010 07:02:09 IST
ரவி குமார், தமிழகத்தில் தண்ணீர் இல்லை எங்கும் புழுதி சுகாதாரம் இல்லை கொலை கொள்ளை என்று தலை விரித்து ஆடுகிறது. தொகுதிக்கு எதாவது உபகாரம் உண்டா ? இவனை தேர்தெடுத்த மக்களை நினைத்து பரிதாப படுகிறேன்.
by Iyer ஹிந்து indian,India,India 22-04-2010 06:52:32 IST
வரும் தேர்தலில் அந்த கோபுரம் உன்னை கண்டிப்பாக தோற்கடித்து ......... எடுக்க வைக்கும்
by s munisamy,chennai,India 22-04-2010 06:44:46 IST
ஏன் ரவிகுமார், இப்போ தமிழகத்துல என்ன பிரச்சன முக்கியம்ன்னு கூட உங்களுக்கு தெரியாதா? நீங்கல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கீங்களா, இல்ல வீணடிக்கரதுக்கு வந்திருக்கீங்களா உங்க தொகுதியில (எதுங்க அது) மின் விநியோகம் எவ்ளோ மணி நேரம்னு தெரியுமா, அதா பத்தி ஒருநாளாவது பேசியிருகீங்களா, இத உங்கள சொல்லி குத்தம் இல்லீங்க , உங்களுக்கு வோட்டு போட்ட மக்களோட தப்பு அது மீண்டும், மீண்டும் நாம் சுய மரியாதை அற்றவர் என்பதை உணர்த்துவதற்கு வேறு காரணங்களே இல்லையா? நமது நாட்டின் தனித்தன்மையை அழிக்க முற்படுவோர் எவரையும், நாம் பார்த்துக்கொண்டி ருக்கலாகாது , இவர்கள் அனைவரும் எட்டப்பன் வழிவந்தவரோ?
by k சஞ்சீவ்,bangalore,India 22-04-2010 06:24:07 IST
ஒரு போதும் தமிழக அரசு கோபுர சின்னத்தை மாற்றக்கூடாது.
by G. Thirunarayanan,Chidambaram,India 22-04-2010 06:12:17 IST
இந்த அரசியல்வாதிகள் இப்படி தான் அண்ணாதுரை சிலை வைத்தால் மூலை முடுக்குகள் எல்லாம்,,,காமராஜ சிலை வைத்தால் எங்கெங்கு காணினும் அவரே...இந்து(கடவுள்) எதிர்ப்பு கொள்கையுள்ள அண்ணாதுரையோ,கருணாநிதியோ இதுவரை சிந்திக்காத ஒன்றை திடீரென்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பு மாற்ற நினைப்பது அவர்களது சிறிய மனப்பான்மை என்று தான் நினைக்க தோன்றுகிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்க திருவள்ளுவர் மேல் இவ்வளவு அக்கறை ஏன்? வள்ளுவர் வழி வாழ முயற்சியுங்கள்...தமிழை முதல் மொழியாக தக்க வைக்க முயற்சியுங்கள். அது தான் நீங்கள் திருவள்ளுவனுக்கு செய்யும் தொண்டாக இருக்கும். மக்கள் தொண்டே மகேஷன் தொண்டு_அண்ணாதுரை ..கீழே இருந்து கோபுரத்தை பார்த்து உன்னை எடுத்து விடுவேன் என்றால் அது நடக்கிற விஷயமா/
by R.S. Mathusoothan,Rsmpp@aol.com,UnitedStates 22-04-2010 05:42:20 IST
துலுக்கனுங்க கிறிஸ்தவனுங்க வோட்டுக்காக இவனுங்க (தி.மு.க, வி.ச, காங்கிரஸ்) இன்னும் என்னென்ன செய்ய போறானுங்களோ.
by tamil ஹிந்து,srivilliputtur,India 22-04-2010 05:31:35 IST
வெயிலுக்கு இதமாக கிங் பிஷெர் பீர் பாட்டில் படத்தை போடலாம். அப்புறம் மாற்றிகொள்ளலாமே! எப்படி என் ஐடியா ?
by எஸ் குப்புசாமி ,சென்னை,India 22-04-2010 05:29:21 IST
This is absolutely nonsense statement from Thiruma party. they are only doing religious politics in the name of minority. Even DMK too I will ask one question to Karuna. as per his party they are not belive in God. will they guts to say there is no God (Jesus) and (Allah) also. people should think this cheap politicians making divide and rule policy .
by Ramkumar,chennai,India 22-04-2010 04:09:01 IST
பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி செய்த டெக்னிக் தான் இது.
by K Rajasekaran,chennai,India 22-04-2010 04:02:01 IST
chumma veti payalunga,uruppadiya ethaiyavathu pesaranungala.ivana MLA akkina makkalathan adikkanum
by T Ravi,london,India 22-04-2010 03:45:26 IST
இந்த ரவிக்குமாருக்கு என்ன தைரியம் இருக்கும்? எப்படி இவர் அரசு சின்னத்தில் திருவள்ளுவர் படம் வைக்க வேணும் என சொல்வார்? எல்ல பொது இடத்திலும் திருக்குறள்க்கு விளக்கம் சொன்னா நம்ம முதல்வர் கருணாநிதி படம் தான்,திருவள்ளுவர் படத்தை விட பெரிசா இருக்கு? அப்படி இருக்கும்போது இனி தமிழக அரசின் சின்னத்தில் கருணாநிதி படம் தான் இருக்க வேணும். உடனே விசி தலைவர் தொல்திருமா ரவிகுமாரை உடனே நீக்க வேணும். புதிய சின்னம் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் >>>>>அந்த படத்தில் வாசகம் ...பணமே வெல்லும்...என இருக்கணும் நடுவில் கலைஞர் படம் மூன்று சிங்கங்கள் இருக்கும் இடத்தில் அழகிரி,ஸ்டாலின்,கனிமொழி படங்கள் இருந்தால் கோஷ்டி சண்டை வராது.
by GB ரிஸ்வான்,jeddah,SaudiArabia 22-04-2010 03:43:19 IST
இருக்கின்ற மசூதியை இடித்தது மத உணர்வை தூண்டிய, மத நல்லிணக்கத்துக்கு எதிரான செயல் என்று கலைஞர் சொன்னது உண்மையெனில், இப்போது புழக்கத்தில் இருக்கின்ற கோபுரம் சின்னத்தை அகற்றுவதும் அதே தன்மையிலான பிழையே. மெட்ராஸ் சென்னையாக மாறியதால் மெட்ராஸ் யுனிவெர்சிட்டி எப்படி சென்னை யுனிவெர்சிட்டியாக மாறத்தேவையில்லையோ , அப்படி இதுவும் மாறத்தேவையில்லை.
by D சூர்யா ,Chennai,India 22-04-2010 03:34:03 IST
A LOT OF THINGS TO DO IN INDIA. THIS IS NOT A BIG ISSUE. LET THEM CONCENTRATE ONTO THAT. NOTHING TO WORRY ABOUT THIS.
by R CHRISH,SYDNEY,Australia 22-04-2010 03:29:56 IST
மு க வே ,வி சி யை ,தூண்டி விட்டு இருப்பார்.1971 ல்,இந்திரா காந்தியிடம்,தமிழ் நாட்டிற்கு தனி கொடி கேட்டு,'தமிழ் நாட்டின் முஜிபிர் ரஹேமான்- என்ற பட்டதைப் பெற்றவர்'. கொடி கிடைக்க வில்லை. குதிரை ரேசை ஒழித்ததற்கு சிலை வைத்தார். இன்றும் ரேஸ் நடக்கிறது.
by R Karuppiah சத்தியசீலன் ,Kinshasa,Congo(Zaire) 22-04-2010 03:28:38 IST
திரு.மு.க. ஹிந்துக்களை தீவிரவாதியாக்கி பார்க்க ஆசைபடுகிறார். அதனால்தான் இவரை விட்டு ஆழம் பார்க்கிறார். ஏற்கனவே ஹிந்துக்களை திருடர்கள், முட்டாள்க, பரதேசிகள், என்றார். சேது சமுத்திர திட்டத்தில் தனக்கு வரவேண்டிய கமிசன் எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் கோடான கோடி பேர் வணங்கும் ராமரை கேலி செய்தார். இப்படி எல்லாம் பேசினாலும் ஹிந்துக்கள் பிரியாணிக்கும் குவாட்டருக்கும்,வோட்டு போடுவார்கள் என்கிற நம்பிக்கைதான். நாளை ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தி.மு.க வை தமிழகத்தில் இருந்து முற்றிலும் துடைத்தெறியும் விதமாக உங்கள் வாக்கை பயன் படுத்துங்கள்.அதோடு உங்களை, சாதி மூதெவியிடம் இருந்து விடுவித்து கொள்ளுங்கள். திருமா மற்றும் ராமதாஸ் & கோ. சாதியின் பெயரால் கொள்ளையடித்து கொழுத்து கிடக்கிறது. சாதிக்காக இதுவரை என்ன செய்திருக்கிறது. ஹிந்துக்களே சிந்தயுங்கள். ஓன்று பட்டால் உண்டு வாழ்வு.
by ajith த.செல்வன்,Tirunelveli,India 22-04-2010 02:53:26 IST
இங்கு யாரும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் அதை தினமலரே சுட்டி கட்டிவிட்டது. அந்த சின்னம் ஒன்னு தான் இதுவரைக்கும் யாரு கண்ணுக்கும் படமா இருந்தது. சட்ட சபைக்கு போறதுக்கு முன்னாடி ரூம் போட்டு யோசிச்சிட்டு அப்புறம் போவாங்களோ!!! நாட்டுல கரண்ட் இல்லாம மக்கள் படுகிற அவஸ்த்தையை பற்றி பேசுங்கனா, அதை விட்டுட்டு, எட்டு கால் பூச்சிக்கு ஏன் ஏழு கால் தான் இருக்குனு ஆராய்ச்சி பண்ணிட்டு. போயி பொழைக்கற வழிய பாருங்க!!!!! (ஏன்னா அது கால் மேல கால் போட்டு இருந்ததாமா)
by p மோகன்,SANSEBASTIAN,Spain 22-04-2010 02:46:35 IST
I THINK ONLY DINAMALAR IS GIVING IMPORTANCE TO THESE TYPES OF NEWS. STOP GIVING IMPORTANCE TO THESE TYPES OF SILLY ISSUES.
by Paris EJILAN,-,France 22-04-2010 02:28:26 IST
இந்த பேச்செல்லாமே..மஞ்ச துண்டு பெருசுவின் முன்கூட்டியே திட்டமிட்டு 'காய்'நகர்த்தும் குறுக்கு வழியாகும். ஆயிரமாயிரம் 'பிரச்சினைகள்' தேங்கி கிடக்க வெட்கமே இல்லாமல் 'தேவையில்லாத' பிரச்சனைகளை பேசி பேசியே 'திசை'திருப்புவது இந்த பெரிசின் வேலையாகும். இங்கே விமர்சிக்கும் அத்துணை பேரையும் கேட்கின்றேன், இந்த 'கோபுர' பிரச்சினை ரொம்போ 'முக்கியமா'? ஏன் கோபுரத்தை எடுத்துவிட்டு சட்ட சபையில் இருக்கும் இந்த மஞ்ச துண்டு படத்தை வைக்க சொல்லி பேச வையுங்களேன்..கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் போல் காட்டிக்கொள்ள முயலும் இந்த கேடு கேட்ட மனிதர்களே..முதலில் மஞ்ச துண்டை தூக்கி எரிந்து விட்டு உனது 'பகுத்தறிவை' பறை சாற்றேன்..கேட்டால் நாங்கள் சொன்னதைவிட 'சொல்லாததையும்' செய்வோம் என்பது 'இந்த லட்சனம்தானோ'? ஏண்டாப்பா 'கூஜா'தூக்க வேறு பிரச்சினையே இல்லையா? இவர் போன்றோரை எம்.எல்.ஏ ஆக்கிய அந்த தொகுதி மக்களை சொல்லணும்..பரவாயில்ல அடுத்த முறை அதே தொகுதி மக்கள் ஓட ஓட விரட்டும்போது கோபுரத்தை அகற்ற நினைத்த் இவர்களை ஒண்ட இருக்கும் வீடு கூட இடிந்து நாசமாய் போக மனதார 'வாழ்த்துகின்றேன். இங்கே வயிறெரிந்து விமர்சிக்கும் வாசகர்கள் சார்பாக..கோவில் சொத்தை கூறுபோட்ட இவர்களுக்கு இப்போ கோபுரத்தையே அகற்ற நினைக்க இவர்கள் 'குலமே' நாசமாகும் என்பதை இதே தினமலரில் நாம் படிக்கத்தான் போகின்றோம் செய்தியாக..வயிறெரிந்து சொல்கின்றேன்..
by P சேகர்,SINGAPORE,Singapore 22-04-2010 02:05:55 IST
வீனா போன விடுதலை சிறுத்தைக்கு வேற வேலையே இல்ல. நாட்டுல கோபுர சின்னத்த மாத்தினா நாட்டுல பாலாரும், தேனாரும் ஓடுமா. தமிழ் வருட பிறப்பை கருணா மாற்றினாலும் மக்கள் பின்பற்றவில்லை என்பதை பெருசு நினைக்க வேண்டும்.
by k mokkasamy,maldives,India 22-04-2010 01:49:24 IST
தமிழ்நாட்டுல தீர்க்கபடாத பிரச்சினைகள் எவ்வளோவோ இருக்கும்போது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்க பட்ட தமிழ்நாட்டு அரசு சின்னத்தை மாத்தவேண்டிய அவசியம் என்ன? விவரம் இல்லாத ஆளுகளை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிய தமிழக மக்களே சிந்திப்பீர். நல்லவர்களை தேர்ந்தெடுங்கள். இல்லை என்றால் தமிழ்நாட்டுக்கும் கேடு. உங்களுக்கும் கேடு. உணருங்கள்
by N கவிதைப்ரியன்,ABUDHABI,India 22-04-2010 01:47:07 IST
உங்களை சட்டசபைக்கு அனுப்பி உருப்புடியா ஊருக்கு ஏதாவது பண்ண சொன்னா தேவையில்லாத அலப்பறை எதுக்கு? காலம் காலமாக நமக்கே உண்டான அழகான கோபுர முத்திரை..கோபுர முத்திரையை எடுத்துட்டு திருமாவளவன் படத்த போட சொல்லியிருக்கலாமே..உருப்படியா தொகுதிக்கு ஏதாவது நல்லது செய்யுற மாதிரி பேசுங்க..
by அம்முகுட்டி ,malaysia,India 22-04-2010 01:06:18 IST