Tuesday, November 17, 2009

Dinamalar News

நமது தழிழ் தலைவர் உள்ளம் நெகிழ்ந்து அறிக்கை விட்டுள்ளார் அதை கிழ நரி முராரி பாடுகிறது என்று விமர்சனம் செய்து பார்பானிய செய்திதாள் பிரசுரித்துள்ளது


புலிகள் அவசரப்பட்டு எடுத்த முடிவுகளின் விளைவுகள் : முதல்வர் வேதனை
நவம்பர் 18,2009,00:00 IST


Front page news and headlines today

சென்னை : "விடுதலைப்புலிகள் அவசரப்பட்டு எடுத்த அரசியல் முடிவின் விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது; நம் மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது?' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.



அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையில் நடந்த "டெசோ' இயக்க மாநாட்டில், பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் பங்கேற்று, சகோதார ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினர். அந்த மாநாட்டில் எல்.டி.டி.ஈ., இயக்கத்தின் சார்பாக திலகர் என்பவர் வந்திருந்தார்; பிரபாகரன் வரவில்லை. அரசு பொறுப்பில் முதல்வராக இருந்து கொண்டே, அமைதிப்படை நாட்டிற்கு திரும்பி வந்ததை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து, தமிழகத்தின் உணர்வை நான் வெளிப்படுத்தினேன். ஆனால், விடுதலைப் படைமுகத்தில் நின்ற ஒரு சில தலைவர்களுக்கு, நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு மிக லேசாகவே தெரிந்தது. போர் முனையில் வீரத்தை பயன்படுத்திய அளவு, விவேகத்தை பயன்படுத்த வேண் டும் என, நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தினாலோ அலட் சியப்படுத்தினர்.



இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அளித்த பேட்டியை கூர்ந்து கவனித்தால், விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைபிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும். சகோதர யுத்தத்தின் காரணமாக, தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு, தொலைத்து விட்ட காரியங்களாக அமைந்தன என்பதை போர்முனை சரித்திரம் இன்னமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு இருக்கிறது. நான் யார் மீதும் குற்றம் குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை. சகோதர யுத்தத்தின் காரணமாக நம்மை நாமே, கொன்று குவித்துக் கொண்டு, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால், நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், எத்தனை தமிழர்கள் உயிரிழக்க நேரிட்டது? பலர் தங்கள் சொத்துக்களை இழந்து விட்டு, நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சை, பராரிகளாக செல்ல நேரிட்டது. அகதிகள் முகாம்களில் பலர் ஆண்டுக் கணக்கில் வாட நேர்ந்தது. இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் பிரபாகரன் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதிதான் என்ன? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து, தமிழர்களின் உயர்வுக் காக பாடுபட வேண்டியவர்கள், தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டுவிட்டார்களே என்ற ஆதங்கமும், வேதனையும் ஏற்படுகிறது.



விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றியும், இலங்கைப் பிரச்னை பற்றியும் 1989ம் ஆண்டு என்னை அழைத்து பேசிய ராஜிவ் காந்தி "நீங்களும், முரசொலி மாறனும், வைகோவும் இலங்கை சென்று பிரபாகரனுடன் இந்த பிரச்னை குறித்து விரிவாக பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்கான நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். சந்திப்புக்கு தேவையான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன். இலங்கைத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்' என்று உறுதியளித்தார். அந்த இளம்தலைவர், தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோக சம்பவம். அந்த சம்பவமும் இலங்கை விடுதலைப் போராட்டத் தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று.



இலங்கை அதிபரை தேர்ந்தெடுக்க 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட ரணில், "தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், புலிகளுடன் அமைதிப் பேச்சைத் தொடருவதற்கு முன்னுரிமை அளிப்பேன்' என்றார். ஆனால், அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர். ஏழு லட்சம் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்ததால், ஒரு லட்சத்து 81 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், ரணில் தோல்வியடைந்தார். "தேர்தலில் தமிழர்கள் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்று அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை, தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்' என, இது பற்றி ரணில் அண்மையில் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் சார்பாக, அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது; நம் மவுன வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது? இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


திணமலரோ ஏன் ஐயா இந்த செய்தியை தாங்கள் பிரசுரிக்கவில்லை கிராசு பெல்ட் உறவா?
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் உல்லாசமாக இருந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அர்ச்சகர் தேவநாதன் காஞ்சி கோர்ட்டில் சரணடைந்தார்.


வாசகர் கருத்து
I am a Srilankan Tamil origin,living in australia. Some of the commenters have said that LTTE killed Rajiv and they were responsible for all these problems of tamils. since LTTE was hardliners, not elected by people ,you can expect them to be ruthless and bad. But my question is that why there is no inquries for conduct of Indian forces in Eelam. If India is a democratic contry and respect human rights, why did the arm forces of india killed innocent people in eelam?. If the people of India respect women as their mothers and sisters why our had women got gang raped by ruthless Indian Army?.

you know , LTTE might be a terrorist gang, but untill now no one blames them for raping a woman. Because we,tamils , respect women.

If you say, everywhere there are bad people, then thoes culprits should be punished through the law. But India is protecting them. No justice for Eelam tamils. Indian got their justice for loosing Ragiv by killing thousands of LTTE and innocent Eelam people. Then how can Eelam people get their justice for the crimes commited by Indian army?
we don''t expect any justice from Srilankan government but we do expect some sort of justice from Indian goverment.

lastly, my family was also a victim of crimes commited my Indian army. One of my uncles, who was a doctor in Jaffna hospital, was murdered along with 2 others doctors and nurses by Indian army in the hospital for trying stop the army from killing 5 innocent students in front of the hospital.

so if indian government stands for human rights and justice our family along with many of other victims, will come forward to give witness and evidence.
will you people do that first???.
At least a sorry from indian government!!
by T siva,Adelaide,Australia 11/18/2009 6:06:32 AM IST
கிழ நரி முராரி பாடுகிறது !!! Beware of him !!!
by N Jiang,wuxi,China 11/18/2009 6:03:51 AM IST
ஐயா சூப்பர் அப்படியே ''பராசக்தி''பட வசனம் மாதிரியே இருக்கிறதே,எப்படினே எப்படினே.இதுதான்யா நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்த பெரிய தொண்டு.
by AMY முஹம்மத் அமின் ,paris,France 11/18/2009 5:56:47 AM IST
ஐயா சூப்பர். அப்படியே ''பராசக்தி''பட வசனம் மாதிரியே இருக்கிறதே,எப்படினே எப்படினே. இதுதான்யா நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்த பெரிய தொண்டு.
by AMY முஹம்மத் அமின் ,paris,France 11/18/2009 5:55:00 AM IST
ஹலோ கருணாநிதி, உங்க ஆட்சியில மக்கள் மவுனமா அழறது உங்க காதில விழுதா? சினிமாவுக்கு கதை எழுதினவர்னு மறுபடியும் நிரூபிச்சிட்டீங்களே?
by S Mathew,Toronto,Canada 11/18/2009 5:53:29 AM IST
ஜன(பண)நாயகத்தில் நம்பிக்கை கொண்டவரே, பிரபாகரன் என்ற தனி மனித முடிவுக்கு கட்டுப்பட்டு 7 லட்சம் தமிழர்கள் தேர்தலை புறக்கணித்தார்கள் என்றால் அவர்கள் யாரை நம்பினார்கள் அவர்கள் எதை எதிர்பார்கிறார்கள்?
சுதந்திரம் எனது பிறப்புணர்வு என்ற திலகரை போற்றும் நாட்டில் எப்படி உங்களால் இப்படி புலம்ப முடிகிறது
''காலகொடுமை''
தீ.ப. பத்மநாதன்
உடுமலை
by d.p padmanathan,udumalai,India 11/18/2009 5:29:35 AM IST
யோவ் காஜா, நீங்க பொண்டாடிக்கு பயந்தவன். நல்ல செய்திகளுக்கு நல்ல விமர்சனம் செய்யவும்.

by A Sam,Sweden, Vasteras,Sweden 11/18/2009 3:47:08 AM IST
மிகச்சரியான கருத்து. எப்போதும் கலைஞரை குறை சொல்லும் கூட்டம் இதை நன்கு படித்து பொருள் கொள்ளவேண்டும். கண்மூடித்தனமாக அவரை குறை கூறாமல் ஒருகால் தாங்கள் நினைப்பது போல் (worstcase மதிய கூட்டணி ஆதரவு வாபஸ்) அவர் செயல்பட்டிருந்தால் நல்லது நடந்திருக்குமா என்று யோசித்து பாருங்கள். என்னதான் தமிழகம் மற்றும் இந்தியா முயன்டிருந்தாலும் முடிவை தடுத்திருக்க முடியாது. அப்படி குறை சொல்பவர்கள் ஏன் கலைஞருடன் கை கோர்த்து போராட வில்லை. இவர்கள் செய்வது வெறும் அரசியல் என்பது சென்ற நாடாளுமன்ற தேர்தல் முயடிவுகளின்மூலம் தமிழக மக்கள் ஏற்கனவே உணர்த்தியுள்ளனர்.
by சின்னா,phoenix,United States 11/18/2009 3:45:38 AM IST
''Thanizh Ena Throgi '' Kalaigner karunanidhi have no rights to talk about tamil and tamil ealam.
by t srinivasan,chennai,India 11/18/2009 2:39:48 AM IST
என்ன நடிப்பு. எல்லாம் முடித்தப்பின் பேச வேண்டியது தானே, தமிழக காவலனே வாழ்க பல்லாண்டு.
by pv ஏமாதர்மன் ,valaja,Ivory Coast 11/18/2009 2:38:24 AM IST
சரியா சொன்னார், புறக்கணித்ததே அவர்கள் செய்த தவறு. அதுமட்டும் இல்லை, ராஜீவை கொலை செய்தது மற்றும், 80 களில் தமிழ்நாட்டில் அடாவடித்தனம் பண்ணி ,தமிழ்நாட்டு மக்களில் கோபத்தை பெற்றது
by j jay,torono,Canada 11/18/2009 1:49:14 AM IST
புலிகள் செய்தது தவறு தான் ...ஆனால் அதற்காக பல அப்பாவித் தமிழர் கொலைகளையும் சித்திரவதைகளையும், குழந்தைகள், பெண்கள் மீதான கொடுமைகளையும் தடுக்காதது என்ன நியாயம் ??
தமிழக அரசியல்வாதிகளும் , பத்திரிக்கைகளும் பிற ஊடகங்களும் தமது மனசாட்சிகளுக்கும் , பத்திரிகை தர்மங்களுக்கும் ஏற்ப நடந்து கொண்டனவா ??
by r nagulan,oslo,Norway 11/18/2009 1:40:58 AM IST
ஒவ்வொரு தீவிரவாதிக்கும் உள்ள வெறி பிரபாகரனுக்கு இருந்தது . ராஜீவ் வை கொன்றாலும் , சனநாயக வழியில் நம்பிக்கை வைக்கததும் அவரின் கிரிமினல் குற்றம் . ராஜீவ் வை கொன்றுவிட்டு, இந்தியா அதை மிக லேசாக எடுத்துக்கொள்ளும் என நினைத்தது கொடுமை . அதே வெறியில் நியுக்ளியர் பவர் ஹவுசில் குண்டு போடா மாட்டார் என இந்திய நினைக்குமா ? இந்தியாவுக்கு எது பாதுகாப்போ அதை இந்தியா செய்தது. இந்தியா மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு எல்டீடி யின் வளர்ச்சி சரியானதல்ல என்ற நிலை எடுபட பிரபாகரன் தான் கரணம். எல்டீடி யின் நன்றிகேட்டதனதுக்கு மக்கள் பலியானது தான் கொடுமை. சிங்களர்களும் தமிழர்களும் சேர்ந்து வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவது மற்றும் ராஜபக்சேயை செய்யவைப்பது ஒன்றே நம்மால் முடிந்தது.

by k vani,coimbatore,India 11/18/2009 1:38:39 AM IST
Pl tell Sonia,if you have guts but do not write anymore to cover-up,on SL Tamil issue.What happened to Vangaman relief materials?It is still in Colombo port & Red cross refused to pay duty imposed by SL Govt but on the same day,you gave interview that same have been distributed.What a lie?(PL see Dinamalar). Even TN MPs team also did not raise this issue.
by R Karuppiah Sathiyaseelan,Kinshasha,Congo (Zaire) 11/18/2009 1:09:13 AM IST
//புலிகள் அவசரப்பட்டு எடுத்த முடிவுகளின் விளைவுகள் : முதல்வர் வேதனை//

என்ன செய்வது உங்களின் ராஜ தந்திர துரோக நடவடிக்கைகள் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

ஆனால் ரனில் விசயத்தில் கலைஞர் கருத்தில் நான் உடன் படுகிறேன். ரணில் வந்திருந்தால் விடுதலைப்புலிகளுக்கும், தமிழர்களுக்கும் இன்றைய நிலை வந்திருக்காது என்பது மட்டும் உண்மை.

by M Jeyakumar,Chennai,India 11/18/2009 1:07:14 AM IST
தம்மை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உயிரோடு இருக்க கூடாது என்ற எண்ணம் தான் புலிகளின் அழிவுக்கு முக்கிய காரணமாகிவிட்டது. போராளிகளுக்கு தன்னை போர்களத்தில் எதிர்க்கும் போர் எதிரிகளைதான் கொல்லும் எண்ணம் வர வேண்டுமே தவிர அரசியல் எதிரிகளை அல்ல. ராஜீவ் கொலையை எந்த மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த கொடூர செயலை செய்ததிற்காக அவர்கள் பிறகு சந்தித்த பின் விளைவுகள் ஏராளம். 1991க்கு பிறகு ஏராளாமான நாடுகளின் ஆதரவை இழந்தனர். பல நாடுகள் அவர்களுக்கு தடைகளையும் விதித்தன. எல்லாவற்றுக்கும் மேலாக நெடுமாறன் மற்றும் வைகோவை தவிர இந்திய மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் இழந்தனர்( ஒரு எம்பி பதவிக்காக திருமா தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்). இவர்கள் முடிவு ஒவ்வொரு தீவிரவாத அமைப்புக்கும் ஒரு பாடம்.
by M Amanullah,Dubai,United Arab Emirates 11/18/2009 1:05:56 AM IST
''நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது''
முதல்வர் சத்தம் போட்டு அழுதால் காங்கிரஸ் காதில் விழும்! காங்கிரஸ் காதில் விழுந்தால் பதவி போகும்! என்ன ஒரு மன குமுறல். இனி எத்தனை முறை சொல்வீர்கள் சகோதர யுத்தத்தின் காரணமாக என்று?
by a tamil,covai,India 11/18/2009 1:03:01 AM IST
லேட்டஸ்ட் அழுகை டிராமா - வழங்குபவர் மு.க. - பாவம் - தமிழர்கள்
by S RAJA,Mumbai,India 11/18/2009 12:49:04 AM IST
LET THIS BE HEARD TO THE EARS OF NEDUMARAN, RAMADOSS, VAIKO AND OTHER EELAM SUPPORTERS
by MR RAMESH RAYEN,ABU DHABI,United Arab Emirates 11/18/2009 12:47:51 AM IST